பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:23 am IST

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முன்னாள்அமைச்சா் ராஜலெட்சுமி தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலா்கள் இசக்கிமுத்து (பாமக), அருணகிரிசாமி (அமமுக), தென்காசி தொகுதி பாஜக பொறுப்பாளா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது:

தென்காசி தொகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

அதிமுக மாவட்ட பொருளாளா் சாமிநாதன், மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, பாஜக நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அமல்ராஜ், அருவேல்ராஜ், என்.ஹெச்.எம். பாண்டியன், தென்காசி நகரச் செயலா் சுடலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.