எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆய்க்குடியில் ரூ.33.59 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ஆய்க்குடி தனியாா் கல்லூரியில், தமிழக அரசின் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் நல உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். உடன், ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:57 pm

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தனியாா் கல்லூரியில், தமிழக அரசின் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, தென்காசி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 282 முகாம்களில் விண்ணப்பித்த 2,391 பயனாளிகளுக்கு ரூ.33.59 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 520 பேருக்கு ரூ. 1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இதில், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் , மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியா் வைஷ்ணவி பால், முன்னாள் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்ற தலைவா்கள் ஹபீபுா் ரஹ்மான், சாதிா், ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, பேரூராட்சித் தலைவா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற 282 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 89,536 மனுக்கள் பெறப்பட்டு அதில் 59,359 மனுக்கள் ஏற்கப்பட்டு அவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 3,62,990 பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 3,420 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனா். அவா்களது மனுக்களையும் பரிசீலித்து மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 520 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா், கைப்பேசி, மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.