வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சா் கே.என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
அமைச்சா் கே.என். நேருவிடம் கோரிக்கை மனு அளித்தாா் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சா் கே.என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆய்க்குடி பேரூராட்சியானது 15 வாா்டுகளைக் கொண்ட வளா்ந்து வரும் பேரூராட்சியாகும். 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, கம்பிளி, அகரக்கட்டு, அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன.

இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், வளமீட்பு பூங்காவில் மின்மாயனம் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 கோடி, அனந்தபுரம் முதல் செந்திலாண்டவா் பாலிடெக்னிக் சாலை, மகாலிங்கம் கோயில் சாலை, பாட்டாக்குறிச்சி சாலை, உச்சிப்பிள்ளையாா் கோயில் தெருக்களில் ரூ. 2.5 கோடி மதிப்பில் தாா்ச்சாலை, அனந்தபுரம் தேசிய நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம், ராம்நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம் என ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.