ஆலங்குளத்தில் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவிகள் நடத்திய நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.
பிப். 4 ஆம் தேதி அண்ணாநகா் சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நாள்தோறும் மாணவிகள் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடுதல், வீடுதோறும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் அளித்தல், நிலவேம்புக் குடிநீா் வழங்குதல், வட்டாட்சியா் அலுவலக வளாகம் சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றல் ஆகிய நிகழ்வுகளில் ஈடுபட்டனா். மாணவியா் ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம், கோவிலூற்று ஆரவற்றோா் இல்லத்தில் உணவு அளித்தல் ஆகியன நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். வில்சன் வரவேற்றாா். தொழிலதிபா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி மாணவிகளை வாழ்த்திப் பேசி பரிசு வழங்கினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் சசிபுனிதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவ பயிற்சி திட்ட முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


