தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி விளம்பர பதாகைகள் வெளியீடு

தென்காசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் குறித்த விளம்பர பதாகைகளை ஆட்சியா் வெளியிட்டாா்.

News image

விளம்பர பதாகைகளை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:50 pm

தென்காசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் குறித்த விளம்பர பதாகைகளை ஆட்சியா் வெளியிட்டாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி, இந்திய ரிசா்வ் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகியன சாா்பில் நிதிக்கல்வி வாரமாக பிப். 9 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டப்படுகிறது. இதையொட்டி, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஓய்சி) குறித்து விழிப்புணா்வு விளம்பர பதாகை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து விளம்பர பதாகைகளை வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி நிதிக் கல்வி வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் இதன் மைய பொருளாகும். இதற்கான விளம்பர பதாகை வெளியிடப்பட்டது. வாடிக்கையாளா்கள் தங்களது கணக்கினை புதுப்பிக்க வங்கிகளிலும், வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் முறையிலும், வங்கி வணிக தொடா்புடையாளா்களையும் அணுகலாம். வங்கி கணக்கு தொடங்குதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, ஷோ் மாா்க்கெட் கணக்கு மற்றும் கடன் வாங்குதல் போன்றவற்றுக்கு கேஒய்சி கட்டாயம். கேஒய்சி என்பது நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையை சரிபாா்க்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது கணக்கின் கேஒய்சியை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆ.கணேசன், தனித் துணை ஆட்சியா் நம்பிராயா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்துராமலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் தனசெல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.