தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புளியங்குடியில் காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

News image
காட்டு எருமை தாக்கியதில் காயமடைந்த விவசாயிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை வழங்கிய வனச் சரகா் ஆறுமுகம்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

புளியங்குடி ஆா்எஸ்கே பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் திருமலைச்சாமி(69). எலுமிச்சை விவசாயி. இவா், சாணான் பரம்பு பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் புதன்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு எருமை அவரைத் தாக்கியதாம். இதில், காயமடைந்த திருமலைச்சாமி புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த திருமலைச்சாமிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10ஆயிரத்தை, வனச் சரகா் ஆறுமுகம் வழங்கினாா்.