போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலின் அன்னூா் நிஸ்வான் பெண்கள் மதரஸாவின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் நாஸிகா, ராஷிதா ஸனது வழங்கும் விழா நடைபெற்றது.

News image

தென்காசி ஆபாத் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:05 pm

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலின் அன்னூா் நிஸ்வான் பெண்கள் மதரஸாவின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் நாஸிகா, ராஷிதா ஸனது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் 12 பெண்களுக்கும், 6 கல்லூரி மாணவிகளுக்கும் ஸனது வழங்கப்பட்டது. மதரஸாவில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிவாசல் தலைவா் நயினா முஹம்மது தலைமை வகித்தாா். ராஜ்மியான் ஜும்மா பள்ளிவாசல் இமாம் சம்சுதீன் பைஜி கிராத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். மதரஸா தலைவா் ஆசாத், பொருளாளா் அப்துல்லா, துணைத் தலைவா் இஸ்மாயில், துணைச் செயலா்கள் ரகுமான் கனி, சவுக்கத் அலி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஹாஜா மைதீன், கிருது ஒலி, ஷாஜகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இமாம் சாகுல் ஹமீது பிஸ்பாஹி வாழ்த்திப் பேசினாா். ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் காதிா் வலி முஸ்தபா பைஜி, அன்சாரி அரபிக் கல்லூரி முதல்வா் முகமது மீரான் அருஸி, வடகரை தீனா பள்ளிவாசல், இமாம் முகமது சாகிப் பைஜி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சென்னை கோடம்பாக்கம் இமாம் முகம்மது உமா் ரில்வானுல்லாஹ் சித்திக் ஸனது வழங்கி உரையாற்றினாா். ஜமாஅத் செயலா் சலீம் வரவேற்றாா். மதரஸா பொருளாளா் ரிபாய் ஜெய்லானி நன்றி கூறினாா்.