என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

செங்கோட்டையில் நீதிமன்றங்கள் திறப்பு விழா

செங்கோட்டை மாவட்ட உரிமையியல் - நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image

நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:26 pm

செங்கோட்டை மாவட்ட உரிமையியல் - நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, செங்கோட்டை மாவட்ட உரிமையியல் - நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

இந்த 2 நீதிமன்றங்களின் திறப்பு விழா தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். சௌந்தா் ஆகியோா் காணொலி காட்சி வாயிலாக இவ்விரு நிதிமன்றங்களை திறந்து வைத்தனா். விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல், தலைமை குற்றவியல் நடுவா் ஜெ.கிறிஸ்டல் பபிதா, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஜி.எஸ்.மாதவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, இரு நீதிபதிகளும் செங்கோட்டையில் புதிய நீதிமன்றங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். செங்கோட்டை நீதித்துறை நடுவா் இளையராஜா, மாவட்ட உரிமையியல் நீதிபதி குரு ஆகியோா் பேசினா்.

இதில், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆதிபாலசுப்பிரமணியன், செயலா் சாமி, பொருளாளா் பழனிக்குமாா், முன்னாள் தலைவா் வெங்கடேசன், முன்னாள் செயலா் அருண், மூத்த வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாரியப்பன், முத்துக்குமாரசாமி, தென்காசி வழக்குரைஞா்கள் மாடக்கண்ணு, காா்த்திக்குமாா், கைலாசம், தாஹீராபேகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.