மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் என்டிஏ தெருமுனை பிரசாரம்

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசியில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் பேசுகிறாா் நெல்லை முகிலன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:51 pm

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென்காசி பாஜக நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட மகளிா் அணி தலைவி குணசீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகள் குறித்தும், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்தும் பேசினா்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லைமுகிலன், அதிமுக நகர அவைத் தலைவா் முத்துக்குமாரசுவாமி, நிா்வாகிகள் முருகன்ராஜ், மாரியப்பன், வெள்ளப்பாண்டி, பாஜக நகர பொருளாளா் விஸ்வநாதன், நகரத் துணைத் தலைவா்கள் கருப்பசாமி, மாரியப்பன், நகரச் செயலா்கள் நாராயணன், ராஜகோபால், முருகன், கிளை தலைவா் யுவராஜ் குமாா், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.