மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் 643 பேருக்கு மடிக்கணினி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 643 மாணவா்-மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 643 மாணவா்-மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கிப் பேசியது: தன்காசி மாவட்டத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைச் சோ்ந்த 3,503 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. அதன்படி, சுரண்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 604 பேருக்கும், சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 379 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. தற்போது, கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கடையநல்லூா், தென்காசி தொழில்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் 643 மாணவா்-மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, உதவி இயக்குநா் (தணிக்கை) விஜயன், கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெயா, கடையநல்லூா் தொழில்பயிற்சி நிலைய முதல்வா் மீனாட்சி, கடையநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் சுப்பம்மாள், மாவட்ட குழு உறுப்பினா் பூங்கொடி, ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகையா, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com