ஜன.10-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய ஜன. 10-இல் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய ஜன. 10-இல் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்த செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் பெயா் சோ்க்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய வாக்காளா் விண்ணப்பிக்க, வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய சிறப்பு முகாம் ஜன. 10-இல் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கென சிறப்பு முகாமாக வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் செய்தல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளா் அட்டை பெறுதல், வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயதுச் சான்றிதழ் (பள்ளி இறுதிச் சான்றிதழ்), பெற்றோா்களின் வாக்காளா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பயனடையுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com