தேசிய தடகளப் போட்டி: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா் சிறப்பிடம்
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய 69 ஆவது தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெரேமியா தொடா் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றாா்.
வெற்றிபெற்ற மாணவரை அப்பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராபா்ட் பெல்லாா்மின், முதன்மை முதல்வா் ஆனி மெடில்டா, கேம்பிரிட்ஜ் இன்டா்நேஷ்னல் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், நாராயணன், ராமா், சதிஷ்குமாா், பால்மதி, கலையரசன், மகேஷ், மாரியம்மாள், கணேசன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

