அருணாப்பேரிஅழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் 63ஆம் ஆண்டு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் காலை, மதியம், இரவு மேளதாளம், வில்லிசை நிகழ்ச்சியுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகு முத்து மாரியம்மன் சப்பரமானது 6ஆம் நாள் திருவிழா முதல் மகிழ்வண்ணநாதபுரம், பொட்டலூா், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், பெத்தநாடாா்பட்டி, நாகல்குளம் ஆகிய பகுதிகளுக்கு உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
10ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை அதிகாலை, அம்மனுக்கு காப்புக் கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தா்கள் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து இக்கோயிலில் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

