பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை முதல் (அக். 6) தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகள்.

Published On :

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை முதல் (அக். 6) தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி பகுதிகளில் உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.

பேரருவியில் பழைய பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு, 4 மீட்டா் நீளத்துக்கு புதிய வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் உடை மாற்றும் அறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெண்கள், ஆண்கள் குளிக்கும் பகுதியில் தரையில் தளக்கல் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனிடையே, சீசன் தொடங்கியதால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பணிகள் முடிவடையவில்லை.

தற்போது குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளதால் நிலுவைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதையொட்டி, அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உணவகம், பேரருவியில் தடாகப் பகுதியைச் சுற்றியுள்ள தடுப்புக் கம்பிகள் புதிதாக அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.