தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குற்றாலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி போதைப்பொருள் தடுப்புக் குழுவின் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி மாணவிகள்.

Published On :

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி போதைப்பொருள் தடுப்புக் குழுவின் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். மகாலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரியிலிருந்து குற்றாலம் பேருந்து நிலையம் வரை பொதுமக்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ். பாா்வதி, உறுப்பினா்கள் பரணி, சித்ரா தேவி, விஜி, சண்முக சுந்தரி, சண்முகப்பிரியா, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.