

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சத்தியஜோதி பெண்கள் இயக்க ஆலோசகர் எஸ்.சக்தி தலைமை வகித்தார்.நவஜீவன் அறக்கட்டளை இயக்குநர் பி.நளன் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் கே.ராஜமணி கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புபணி அலுவலர்கள் எஸ்.வெங்கடேஷ்,எஸ். திருமலைக்குமார்,ஏ.மைக்கேல்சார்லஸ்,ஜி.அன்பரசன்,டி.சந்திரகுமார்,டி.சுந்தர் ஆகியோர் பேரிடர் ஏற்படும் போது தப்பிப்பது குறித்து செய்முறை பயிற்சி அளித்தனர்.முன்னதாக நவஜீவன் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராதா வரவேற்றார்.பணியாளர் பி.கிருஷ்ணேஸ்வரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.