

ஆலங்குளத்தில் நகர,வட்டார,பேரவை தொகுதி அளவிலான காங்கிரஸ் கமிட்டி சார்பில்,காமராஜர் பிறந்ததினவிழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,மத்திய அரசின் சாதனை விளக்க விழா ஆகியன செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.விழாவுக்கு எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி தலைமை வகித்தார்.விஜயதாரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கொடிக்குறிச்சிமுத்தையா, மோகன்குமாரராஜா,முன்னாள் நகர தலைவர் வி.பி.செல்லையா,ஏ.அமீர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சத்தீஸன் கலந்து கொண்டு, மாணவ,மாணவிகள் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிதாவது:
மத்திய அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தால் நாட்டில் 85 கோடி மக்கள் பயன்பெறுவர்.மத்திய அரசின் சாதனைகளில் தகவல்அறியும் உரிமை சட்டம்,கிராமப்புற மக்களுக்கான வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவைகள் முக்கிய சாதனைகளாகும்.மத்தியில் ஆட்சியை மீண்டும் அமைப்பது மட்டுமின்றி,தமிழகத்திலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்றார் அவர்.நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் கரூர் சிவாஜிதுரை,முரளிராஜா,குணசேகரன்,சிந்தா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.வைகுண்டராஜா தொகுத்து வழங்கினார்.நகர தலைவர் அருமைநாயகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.