நெல்லையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தெற்கு ரயில்வே அண்ணா யூனியன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தெற்கு ரயில்வே அண்ணா யூனியன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்த 70 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை நிராகரித்ததைக் கண்டிப்பது, மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி அனைவரையும் ரயில்வே குரூப்-டி தேர்வு எழுத அனுமதிக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ரயில்வே அண்ணா தொழிற்சங்க மதுரைக் கோட்டத் தலைவர் சி.வெயில்முத்து தலைமை வகித்தார். கிளைச்செயலர் டி.எஸ்.மணி முன்னிலை வகித்தார். பி.செல்லையா, ஏ.சிவபெருமாள், பி.பொன்னுச்சாமி, சாமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.பாலாஜி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் மட்டுமன்றி ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், ரயில்வே தேர்வுகளுக்காக பயிற்சி நிலையங்களில் பயின்று வருவோர் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...