தனிநபர் இல்லக் கழிவறை அமைப்பது குறித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. விஜயகுமார் பேசியதாவது: குடிநீர், சுகாதார போன்ற வசதிகளை முழுமையாக அனைவரும் பெறும் வகையில் முதல்வரின் தொலைநோக்கு திட்டத்தின்படி திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட கிராமங்களில் சுகாதாரத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்த வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அந்தந்தக் கிராம அளவில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் எடுத்து சென்று முழு கவனம் செலுத்தி தூய்மை கிராம இயக்கம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
பயிற்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட திட்ட மேலாளர் (புது வாழ்வு) பாஸ்கரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ஹசன்இபுராஹீம், உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) தெய்வேந்திரன், அனைத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.