கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேலப்பாளையத்தில்  சாலை மறியல்

மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:57 am

DIN

மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மனிநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலர் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் மகபூப் ஜான், மாவட்ட துணைச் செயலர் ரசூல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அக்கட்சியினர் கூறியது: மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை. 
அதனால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக கடந்த வாரமே அறிவித்தோம். அப்போதும் நடவடிக்கை இல்லை. அதன் காரணமாகவே இப்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.  சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.