பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

நெல்லையில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

திருநெல்வேலியில் திருமண வயதை எட்டாத இருவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். 

Updated On :19 ஏப்ரல் 2018, 2:11 am IST

திருநெல்வேலியில் திருமண வயதை எட்டாத இருவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். 
    தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுள்ள பெண்ணுக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த 20 வயதுள்ள ஒருவருக்கும் புதன்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
   இதையடுத்து மாவட்ட குழந்தை நல அலுவலர் தேவ்ஆனந்த் தலைமையில் திருநெல்வேலி வட்டாட்சியர் கந்தசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் பாளையங்கோட்டையில் மனகாவலம்பிள்ளை நகருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
திருமண வயது பூர்த்தி ஆகாத நிலையில் திருமணம் செய்வது சட்டப்படி தவறு என பெற்றோர்களுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.   இதைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.
  இருவரும் ஒராண்டுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். அவர்களது பெற்றோரும் உறுதி அளித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.