ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடிநீர், பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

ஆலங்குளம் அருகேயுள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சிக்குள்பட்ட இருதயபுரம் மக்கள் குடிநீர் வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 10:05 am IST

ஆலங்குளம் அருகேயுள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சிக்குள்பட்ட இருதயபுரம் மக்கள் குடிநீர் வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இருதயபுரம் மக்கள் பின்னர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால், ஒரு நீர்த்தேக்க தொட்டிதான் உள்ளது. அதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக குடிநீர் வரவில்லை. எங்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை பக்கத்து ஊர் மக்கள் அனுமதியின்றி மின்மோட்டார் மூலம் உறிஞ்சி விடுகிறார்கள்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலரிடமும் தெரிவித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறோம். எனவே முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரணாபுரம் மக்கள்: திருவேங்கடம் வட்டம், வீரணாபுரம் மக்கள் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு விவரம்:
திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வீரணாபுரம் கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால், பேருந்து  வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், இங்கு வசித்து வரும் மக்கள் அன்றாடப் பணிகளுக்காக அருகில் உள்ள நகரம், கிராமங்களுக்குச் சென்று வர போக்குவரத்து வசதி இல்லாததால், அவர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
எங்கள் கிராமத்தின் அருகில் சுப்புலாபுரம் கிராமத்திற்கு சங்கரன்கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால், அந்தப் பேருந்துகள் எங்கள் பகுதிக்கு வராததால், 2 கி.மீ. தூரம் நடந்து சென்று நாங்கள் பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் உரிய நேரத்தில் கல்லூரிக்கோ, பள்ளிக்கோ, இதர பணிகளுக்கோ செல்ல முடியவில்லை. எனவே, சங்கரன்கோவில், ராஜபாளையத்தில் இருந்து சுப்புலாபுரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளை எங்கள் கிராமத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இதேபோல் சங்கரன்கோவிலிலிருந்து கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம், குலசேகரப்பேரி, திருவேங்கடம், சாத்தூர் வழியாக இருக்கன்குடிக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.