சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற சிறுபான்மையினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் கிறிஸ்துவ, இஸ்லாமியர், பெளத்தர், சீக்கியர், பார்சி மற்றும் சமண சமயத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சுயதொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை மேம்படுத்தவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் கூடுதலாக சிறுபான்மையினத்தை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்க சிறப்பான முறையில் சுயதொழில் செய்து கொண்டிருப்பவராகவோ, தொழில் சார்ந்த கல்வி கற்று ஆலோசனை வழங்குவதற்கு தகுதி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக ஆடிட்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறுதொழில் பட்டதாரிகளாக இருக்கலாம்). நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்கள் இருவரும் வெவ்வேறு சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே தகுதியுடைய கண்காணிப்புக் குழுவில் இடம்பெற விரும்பும் சிறுபான்மையினத்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தை வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

