களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினரும், பாபநாசம் வனத்துறையினரும் இணைந்து அகஸ்தியர் அருவிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் பார்கவதேஜா ஆலோசனைப்படி இப்பணி நடைபெற்றது.
பாபநாசம் வனச்சரகர் பரத் , கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம், கடையம் வனச்சரக வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர் அகஸ்தியர் அருவிப் பகுதியில் குவிந்துகிடந்த குப்பைகள், பாலித்தீன், மரத்தடிகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
தொடர்ந்து வனப்பகுதியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி மேற்கொள்வர்; அருவிப் பகுதி சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் அருவியில் குளிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலம்! மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்!!

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

