ஆலங்குளத்தில் அரிமா சங்க ஆளுநர் வருகை தினம்

ஆலங்குளம் அரிமா சங்கத்தில் ஆளுநர் வருகை தின விழா கொண்டாடப்பட்டது. 
Updated on
1 min read

ஆலங்குளம் அரிமா சங்கத்தில் ஆளுநர் வருகை தின விழா கொண்டாடப்பட்டது. 
இவ்விழாவுக்கு ஆலங்குளம்  அரிமா சங்கத்  தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். செயலர் பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். அரிமா ஆளுநர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசினார். துணை ஆளுநர்கள் முருகன்,  ஜஸ்டின் பால், மண்டலத் தலைவர் தாமஸ், வட்டாரத் தலைவர் முரளிதரன், மாவட்டத் தலைவர் நாகூர் மீரான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், ஆலங்குளம் அரிமா சங்கம் சார்பில் தையல் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள்,பொது அறிவு புத்தகங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அப்போது, மரம் வளர்ப்பு சேவைக்காக குறிப்பன்குளம் இளந்தளிர் தன்னார்வ அமைப்பினரைப் பாராட்டி  கேடம் வழங்கப்பட்டது.  ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரிமா சங்க உறுப்பினர்கள் ஜோசப், ஆதித்தன், உதயராஜ், செல்லத்துரை, தங்கச்செல்வம், ஜான்ரவி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com