திருநெல்வேலி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நீதிபதி முன்னிலையில் தீவைத்து எரித்து அழிக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரம் கரிக்காதோப்பு இடகரை பகுதியில் ஹனீபா என்பவரது வீட்டில் சந்தேகிக்கும் வகையில் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹனீபா வீட்டில் கடந்த பிப். 15 ஆம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 94 பெட்டிகளும், 55 சாக்கு மூடைகளும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஹனீபா, அலாவுதீன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்த புகையிலை பொருள்கள் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இவைகள் சுத்தமல்லி காவல்நிலையத்தில் வைக்கப் பட்டிருந்தன. புதன்கிழமை அவற்றை லாரி மூலம் கொண்டாநகரம் அருகே காட்டுப்பகுதியில் குவித்து வைத்தனர். சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெனிதா முன்னிலையில் அவை தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.