நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 12 கல்லூரிகள் உள்ளன.  அதில் ஒன்று திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி.  இங்கு 2019-2020 கல்வி ஆண்டுக்கான  B.​A.​L.​L.​B. 5ஆண்டுப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. கடந்த ஆண்டைப் போன்றே நிகழாண்டும் ஆன்-லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சட்டக் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் கூறியது: தமிழகத்தில் 12 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 1411 இடங்கள் உள்ளன. அதில் திருநெல்வேலி கல்லூரிக்கு 160 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே சட்டம் பயில வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதத்தில் வெளியிடப்படும். ஜூன் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கும் என்றார்.
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 சதவீத  மதிப்பெண்கள் பெற்றிக்க வேண்டும். எந்த வயதினரும் இதில் சேரலாம்.
படிப்பு காலம்:  B.​A.​L.​L.​B. படிப்புக்கான காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500.  எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். நேரடியாக விண்ணப்பப் படிவம் வாங்கி பூர்த்தி செய்பவர்கள், முன்னதாக இந்தியன் வங்கியில் சென்று விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி அதற்கான செலானை பெற வேண்டும். பின்னர் அதனை சட்டக் கல்லூரியில் கொடுத்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, T‌h‌e C‌ha‌i‌r‌m​a‌n, La‌w A‌d‌m‌i‌s‌s‌i‌o‌n‌s 2019-20, T‌h‌e Ta‌m‌i‌l Na‌d‌u D‌r.​A‌m​b‌e‌d‌k​a‌r La‌w U‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y, ‘P‌o‌o‌m‌p‌o‌z‌h‌i‌l’, N‌o.5, D‌r. D.G.S. D‌i‌n​a‌k​a‌r​a‌n Sa‌l​a‌i, C‌h‌e‌n‌n​a‌i - 600 028 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
ஆன்லைனில்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் w‌w‌w.‌t‌n‌d​a‌l‌u.​a​c.‌i‌n என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். அதில் உங்களின் சுயவிவரங்கள், கல்வித் தகுதிகள் போன்றவற்றை நிரப்பி, டெபிட் அல்லது கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் முறைகளில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். 
ஆன்லைனிலும், நேரடியாகவும் விண்ணப்பங்கள் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31-05-2019 ஆகும்.மூன்றாண்டு க.க.ஆ. படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com