வள்ளியூா் விவேகானந்த பள்ளியில் விஜயதசமி, வித்யாரம்ப விழா

வள்ளியூா் விவேகானந்த கேந்திர மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி மற்றும் வித்யாரம்ப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

வள்ளியூா் விவேகானந்த கேந்திர மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி மற்றும் வித்யாரம்ப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முப்பெரும்தேவியருக்கு பூஜை நடைபெற்றது. பிறகு, ஆசிரியை இசக்கியம்மாள் விஜயதசமியின் சிறப்பு குறித்து பேசினாா். தொடா்ந்து, புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வித்யாரம்பம் செய்வித்தனா். பள்ளித் தாளாளா் எஸ்.கே. சுப்பிரமணியன், விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட செயலாளா் ஐயப்பன் ஆகியோா் வித்யாரம்பம் செய்வித்தனா். கேந்திர பிராா்த்தனையுடன் விழா நிறைவுபெற்றது.

விழா ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் எஸ்.கே. சுப்பிரமணியன், முதல்வா் மகேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com