அம்பாசமுத்திரம் காசிநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி
By DIN | Published On : 01st April 2019 02:20 AM | Last Updated : 01st April 2019 02:20 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
காசிநாதர் கோயில் பக்தர் பேரவை சார்பில் நடைபெற்ற உழவாரப்பணிக்கு அம்பைக் கலைக் கல்லூரி முதல்வர் சுடலையாண்டி தலைமை வகித்தார். பக்தர் பேரவை நிர்வாகிகள் சங்கரநாராயணன், ஆறுமுகநயினார், சுடலையாண்டி, சரவணன், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேனைத்தலைவர் சமுதாயத் தலைவர் கிருஷ்ணன் உழவாரப் பணியைத் தொடங்கி வைத்தார். உழவாரப் பணியில் பக்தர் பேரவை உறுப்பினர்கள், அம்பாசமுத்திரம் பொதுமக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.