"கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்'
By DIN | Published On : 01st April 2019 02:18 AM | Last Updated : 01st April 2019 02:18 AM | அ+அ அ- |

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் குழு காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு காப்பீடு அளிப்பதற்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடனான உடன்பாடு கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பணியாளர்கள் குழு காப்பீட்டுத் திட்டம் 2019-20 என்ற திட்டத்தில் சேரலாம். ஒரு நபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1451 செலுத்த வேண்டும். இதில் நிறுவனத்தின் பங்கு ரூ.725.50 மற்றும் பணியாளர் பங்கு ரூ.725.50 ஆகும். இதனை வரும் ஏப்ரல் 26ஆம் தேதிக்குள் சங்கம் சார்ந்துள்ள திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை மற்றும் தலைமையகத்தில் செலுத்த வேண்டும். ஏப்ரல் 30-க்கு பிறகு தவணைத் தொகை செலுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.