தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி
By DIN | Published On : 01st April 2019 10:13 AM | Last Updated : 01st April 2019 10:13 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சைவ சபையில் தமிழ் முழக்கப் பேரவையின் 73ஆவது நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ் முழக்கப் பேரவை நிறுவனர் பி.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். செயலர் ராமன் வரவேற்றார். குறுந்தொகை இன்பத்தமிழ் என்ற தலைப்பில் வி.செந்தில்நாயகம் சிறப்புரையாற்றினார். ரா.முருகன், வளன் அரசு, சத்தியமூர்த்தி, ஐயப்பன் மகாலிங்கம், பிச்சையா, வே.முத்துகுமாரசாமி, கிருஷ்ணன், பே.ராஜேந்திரன், நூலகர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சு.சண்முகவேலன் நன்றி கூறினார்.