நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாளை. பகுதியில் தீவிர பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 10:13 AM | Last Updated : 01st April 2019 10:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா.சத்யா பாளையங்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
வேளாண்மையை காப்போம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழருக்கே கொடுப்போம் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சமாதானபுரம், முருகன்குறிச்சி, சாந்திநகர், வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், பெருமாள்புரம், தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த அவர், இந்தப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஆராதனை முடிந்து வரும் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
மண்டல செயலர் ராம்குமார், மாவட்டச் செயலர் கண்ணன், மகளிர் பாசறை மண்டல செயலர் குயிலி நாச்சியார், பாளையங்கோட்டை, திருநெல்வேலி தொகுதி செயலர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.