மானூர் அருகே விபத்து: கட்டடத் தொழிலாளி சாவு
By DIN | Published On : 01st April 2019 10:12 AM | Last Updated : 01st April 2019 10:12 AM | அ+அ அ- |

மானூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
தாழையூத்து பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி என்ற மிக்கேல் (29). சென்ட்ரிங் தொழிலாளி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் நரியூத்து விலக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த காரும், இவரது வாகனமும் எதிர்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தகவலறிந்த மானூர் போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.