களக்காடு, திருக்குறுங்குடியில் திமுக வேட்பாளர் பிரசாரம்
By DIN | Published On : 11th April 2019 07:40 AM | Last Updated : 11th April 2019 07:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
திருக்குறுங்குடி தளவாய்புரம், நம்பித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் களக்காடு பேரூராட்சிப் பகுதியில் 21 வார்டுகளில் உள்ள வீதிகளில் திறந்தவெளி வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் உடன் சென்றனர்.