தமிழ்ப் புத்தாண்டு: பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சேவையில் சிறப்பு சலுகைகள்
By DIN | Published On : 11th April 2019 07:44 AM | Last Updated : 11th April 2019 07:44 AM | அ+அ அ- |

சித்திரைத் திருவிழா, தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைகால சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மற்றும் ரூ.100-க்கு பேப்பர் வவுச்சர் மூலம் செய்யப்படும் டாப் அப் களுக்கு வரும் மே 9 வரை 30 நாள்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. இச்சலுகை சி டாப் அப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப் அப் களுக்குப் பொருந்தாது.
மேலும், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், கணினி மற்றும் நெட்வொர்க் சம்பந்தமான "இன்பிளாண்ட்' பயிற்சி வகுப்புகள், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் மற்றும் நான்கு வாரப் பயிற்சிகள் தேவைக்கேற்ப அளிக்கப்படும். இதற்கான கட்டணம் வாரத்திற்கு ரூ.1300 மட்டுமே.
இதுதவிர, பொறியியல், பாலிடெக்னிக், இளநிலை மற்றும் முதுநிலை கணினி அறிவியல் மற்றும் பி.சிஏ., எம்.சிஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கணினி நெட்வொர்க் பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பயிற்சிக்கட்டணம் ரூ.1500 மட்டுமே. படிப்பை முடித்தவர்களும் இப்பயிற்சியில் பங்கு பெறலாம். வணிகவியல், கணக்கியல் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாள் கணக்கியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்கான கட்டணம் வாரத்திற்கு ரூ.1300 மட்டுமே. மேற்கூறிய பயிற்சிகளுக்கு, ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து ஒரே குழுவாக 26 மாணவர்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ பங்கு பெற்றால் பயிற்சி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும், ஒரே குழுவாக 51 மாணவர்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் பயிற்சி கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் என பிஎஸ்என்எல் பொது மேலாளர் ப.முருகானந்தம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.