ஏப்.14இல் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 12th April 2019 09:38 AM | Last Updated : 12th April 2019 09:38 AM | அ+அ அ- |

தென்காசி-கடையம் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் காலையில் மலை உச்சியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து, மலையடிவாரத்திலுள்ள உற்சவர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலையில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் 108 சீர் வரிசை பொருள்கள் கொண்டு வந்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர். ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் கே. ஆதிநாராயணன் தலைமையில் செய்துள்ளனர்.
இதேபோல், கீழப்பாவூர் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் அன்றைய தினம் காலை 7 மணிக்கு கனி காணுதல், கும்ப ஜெபம், விஷேச திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.