நெல்லை அமமுக வேட்பாளருக்கு சென்னை வேட்பாளர் பிரசாரம்
By DIN | Published On : 12th April 2019 09:39 AM | Last Updated : 12th April 2019 09:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து, தென்சென்னை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்தார்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோபாலசமுத்திரத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கிய அவர், மேலசெவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில், அனைத்திந்திய பெடரல் ப்ளாக் பொதுச்செயலர் ஆனந்த முருகன், மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.என். சொக்கலிங்கம், மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட மருத்துவர் அணி ரவீந்திரன், நகரச் செயலர் சுரேஷ் மற்றும் அமமுக, எஸ்டிபிஐ கட்சியினர் பங்கேற்றனர்.