சங்கரன்கோவிலில் டாக்டர் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 08:44 AM | Last Updated : 17th April 2019 08:44 AM | அ+அ அ- |

தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.
பயணியர் விடுதி முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், பிரதானசாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் கே.கண்ணன், நகரச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுவாமி சன்னதியில் பிரசாரம் நிறைவில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியது:
கடந்த காலங்களில் நான் கண்ட களம் வேறு. இப்போது காண்கின்ற களம் வேறு. இங்கே அனைத்து நிர்வாகிகளிடமும் ஒருமித்த கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இத்தொகுதியில் உள்ள 30 லட்சம் மக்களின் கருத்துகளை மக்களவையில் எதிரொலிப்பேன். எந்த ஒரு சாதி, மதத்துக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இல்லாமல் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...