சுரண்டையில் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
By DIN | Published On : 17th April 2019 08:45 AM | Last Updated : 17th April 2019 08:45 AM | அ+அ அ- |

சுரண்டையில் உரிய அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட முயன்ற பனங்காட்டு மக்கள் கழகத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமிக்கு எதிராக பனங்காட்டு மக்கள் கழக மாநில நிர்வாகி ஹரிநாடார் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமையிலான போலீஸார், ஹரிநாடாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...