நெல்லையில் 103.1 டிகிரி வெயில்
By DIN | Published On : 17th April 2019 08:39 AM | Last Updated : 17th April 2019 08:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுவே இந்த கோடையில் திருநெல்வேலியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை 102.2 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவான நிலையில், செவ்வாய்க்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
கடுமையான வெயில் காரணமாக மதிய வேளையில் மக்கள் நடமாட்டமின்றி மாநகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...