பாளை.யில் கைவல்ய ஞான சபை கூட்டம்
By DIN | Published On : 17th April 2019 08:39 AM | Last Updated : 17th April 2019 08:39 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் கைவல்ய ஞான சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஞான சபையின் குருநாதர் டாக்டர் அய்யப்பன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கம்பன் கழகத் தலைவர் சிவ சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் பேச்சிமுத்து வரவேற்றார்.
நன்னிலம் தாண்டவ ராய சுவாமிகள் அருளிய கைவல்ய நவநீத தத்துவ நூலின் சந்தேகம் தெளிதல் படலத்தை டாக்டர் அய்யப்பன் விளக்கினார். கூட்டத்தில், கிருஷ்ணமூர்த்தி, திருஞானசம்பந்தம், கந்தசாமி, வெள்ளைத்துரை உள்பட பலர் பங்கேற்றனர். ஞானசபை துணைத் தலைவர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...