சுரண்டையில் கோடை மழை நீடிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 26th April 2019 01:33 AM | Last Updated : 26th April 2019 01:33 AM | அ+அ அ- |

சுரண்டை பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
சுரண்டை வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பிந்தைய சாகுபடியாக தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை போன்ற காய்கனிகளும், சோளம், கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சுரண்டை பெரியகுளம், சுந்தரபாண்டியபுரம் பட்டர்குளம், சுரண்டை இரட்டைகுளங்களில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில் சுரண்டை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.