திசையன்விளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா
By DIN | Published On : 26th April 2019 06:32 AM | Last Updated : 26th April 2019 06:32 AM | அ+அ அ- |

திசையன்விளை தேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
விஸ்வகுல பொற்கொல்லர் சமுதாயத்துக்கு பாதிக்கப்பட்ட இக்கோயிலில் சித்திரை கொடை விழா இம்மாதம் 22 ஆம் தேதி கும்பாபிஷேகம், பூஜையுடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவில் திருவிளக்கு பூஜை , குடி அழைப்பு, வில்லிசை, மாக்காப்பு, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
கொடை விழாவில் 2 ஆம் நாளான்று காலையில் அற்புத விநாயகர் கோயிலில் இருந்து திரு மஞ்சன பால்குட ஊர்வலம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் மாலையில் திருமுருகன் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டியம், வில்லிசை, இரவில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
கொடை விழாவன்று காலையில் அம்மனுக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.