விஜய அச்சம்பாட்டில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 26th April 2019 06:34 AM | Last Updated : 26th April 2019 06:34 AM | அ+அ அ- |

திசையன்விளை அருகே விஜய அச்சம்பாட்டில் இலவச கண் சிகிச்சை சனிக்கிழமை (ஏப்.27) நடைபெறுகிறது.
ஐயப்பன் திருவள்ளுவன் கல்வி மற்றும் பொது அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் , அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் சனிக்கிழமை விஜய அச்சம்பாடு இந்து அருள்நெறி தொடக்கப் பள்ளியில் இந்த முகாம் நடைபெறுகிறது.
பள்ளியின் நிர்வாகி ச. ராமகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைக்கிறார். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கல்யாணசுந்தரம் தலைமை வகிக்கிறார். முகாமில், கண் பரிசோதனை செய்து, இலவசமாக விழி லென்ஸ் பொருத்தப்படும். மேலும், முகாமில் பங்கேற்போருக்கு இலவச சொட்டு மருந்து மற்றும் உணவு, தங்கும் இட வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.