கல்லிடைக்குறிச்சியில் ரோட்டரி சங்கக் கூட்டம்
By DIN | Published On : 04th August 2019 01:31 AM | Last Updated : 04th August 2019 01:31 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கம் சார்பில், உலக நிதித் திட்டத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பள்ளிச் செயலர் கே.எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேராசிரியர் விஸ்வநாதன் விளக்கிப் பேசினார். இத்திட்டத்தில் பள்ளிகளின் பங்களிப்பு குறித்து ஆசிரியர் சந்தோஷ்சிவன் பேசினார். ரோட்டரி சங்கத் தலைவர்ச.பூங்குன்றன் வழிமொழிந்தார். அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளி, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர், மாணவிகளின் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கழிப்பறை, சூரிய மின்சக்தி உள்ளிட்ட வசதிகள் தேவை என எடுத்துரைக்கப்பட்டது. ஓய்வுபெறும் ஆசிரியர் ராமனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் செ. பண்டாரசிவன் வரவேற்றார். ரோட்டரிசங்கச் செயலர் வழக்குரைஞர் ரமேஷ் நன்றி கூறினார். வெங்கடேசன்,கண்ணன், லத்தீப், கே.பி.பாலசுப்பிரமணியன், மருத்துவர் பத்மநாபன், ஜவகர், சரவணன், பொறியாளர்ஆறுமுகம், வழக்குரைஞர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ஜான்நிக்கல்சன் தலைமையில் பொருளாளர் சரவணன் செய்திருந்தார்.