தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்
By DIN | Published On : 04th August 2019 04:02 AM | Last Updated : 04th August 2019 04:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகர தமுமுக, மமக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள 51, 52-ஆவது வார்டுகளில் உள்ள ஜவஹர்லால் தெரு, முகம்மது அலி தெரு, வழுக்கு ஓடை, ஜாமியா பள்ளிவாசல் தெரு, மாதா நடுத்தெரு, மாதா மேலத் தெரு, மாதா பூங்கொடிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதோடு, அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி நகர தமுமுக, மமக தலைவர் கோல்டன் காஜா தலைமை வகித்தார். தமுமுக நகரச் செயலர் ஷபிக், மமக நகரச் செயலர் அப்துல்லா, பொருளாளர் நசீர், துணைத் தலைவர் சம்சுதீன், துணைச் செயலர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக, மமக மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
தமுமுக மாவட்டச் செயலர் அலிப் பிலால், மமக மாவட்டச் செயலர் ஜமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...