பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை
By DIN | Published On : 04th August 2019 04:04 AM | Last Updated : 04th August 2019 04:04 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்றது.
பாளையங்கோட்டை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(28). இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில் மணிகண்டன் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தாராம் அப்போது வீடு பூட்டியிருந்ததால் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் பாளையங்கோட்டை போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ராஜேஸ்வரி உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது.