முக்கூடலில் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை பாப்பாக்குடி வட்டார வள கல்வி அலுவலர் கல்யாணி தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் பொற்செல்வி தலைமையில் பள்ளி மாணவர் - மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்திச் சென்று நீர்வளத்தை பாதுகாப்போம், நீர் சேமிக்கும் நீர் நிலைகளை பாதுகாப்போம், மழை நீரை சேமிப்போம், நதிகளை காப்போம் என்ற கோஷங்களுடன் சென்றனர். முக்கூடல் மேல ரத வீதி மற்றும் கீழ ரத வீதியில் ஊர்வலமாக வந்து பள்ளியை வந்தடைந்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.