நெல்லை கம்பன் கழக ஆண்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். ச.கண்ணபிரான் முன்னிலை வகித்தார். வெ.குமரகுருபரன் இறைவணக்கம் பாடினார். கழகச் செயலர் பொன்.வேலுமயில் வரவேற்றார். "எடுத்தது கண்டனர்' என்ற தலைப்பில் சீத்தாராம திருமணத்தை கழகத் தலைவர் சிவ.சத்தியமூர்த்தி இசைப் பேருரையாக வழங்கினார். பே.சங்கரபாண்டியன் நன்றி கூறினார். விழாவில் நெல்லை பொருநை இலக்கிய வட்டம், உலகத் திருக்குறள் தகவல் மையம், வள்ளலார் தமிழ் மன்றம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மரு.இளங்கோவன் செல்லப்பா, போசு.ராசகோபால், பிச்சையா, தளவாய் நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.