அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 06:55 AM | Last Updated : 12th February 2019 06:55 AM | அ+அ அ- |

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் எம். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், "பணிநிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை 9 மணி நேரத்திற்கு கூடுதலாக பணி செய்ய நிர்பந்தப்படுத்தக்கூடாது; பணி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி பணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்; விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தரமான உதிரிப்பாகங்களை பொருத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் துணைத் தலைவர்கள் பி.சிங்காரவேல், எம்.சுரேஷ் சுப்பிரமணியன், பொதுச்செயலர் ஆர்.முத்துக்கிருஷ்ணன், செயலர் என்.பிரம்ம நாயகம், பொருளாளர் என்.சோமு உள்பட பலர் பங்கேற்றனர்.